Saturday, December 24, 2011

ஏசுவும் நானும்! - ஒரு கண்ணீர்க் காவியம்



கொஞ்ச நாள் முன்னாடி ( தீபாவளிக்கு 2 நாள் முன்னாடி ) என்னோட ஃபிரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன், அங்க அவனோட சொந்தகாரங்கல்லாம் வந்திருந்தாங்க! அதுல குழந்தைக நாலஞ்சு பேர் இருந்தாங்க; எல்லாரும் என்கிட்ட தங்களோட தீபாவளி ட்ரஸ காமிச்சாங்க, அதுல ஒரு பையன் ( 8 வயசு இருக்கும் ) மட்டும் காமிக்கல, நானும் கேட்கல! எல்லா குழந்தைகளும் விளையாடிட்டு இருந்தாங்க! அந்த பையன் மட்டும் தனியா உட்கார்ந்திருந்தான், ஏன்பா எல்லாரும் சந்தோசமா வெளையாடராங்கல்ல?  நீ ஏன் சும்மா இருக்கேனு கேட்டேன், இல்லைங்க சும்மா தான்னு சொல்லிட்டான், நானும் ஃபிரண்டுகிட்ட சொல்லீட்டு வீட்டுக்கு வந்திட்டேன்.


அடுத்த நாளும் ஃப்ரண்டு வீட்டுக்கு போக வேண்டியதா போச்சு, எல்லாரும் வெடி வெடிச்சிட்டு இருந்தாங்க அந்த பையன் மட்டும் எப்பவும் போல தனியா இருந்தான், அவன் கிட்ட போய் எல்லாரும் தீபாவளி டிரஸ் காட்டிட்டாங்க, நீ மட்டும் தான் காட்டல எடுத்துட்டு வா பார்க்கறேனு சொன்னேன், அவன் பதிலே பேசல, கூட இருந்த ஒரு பொண்ணு நான் எடுத்திட்டு வர்ரேன் அங்கிள்னு சொல்லீட்டு போய் ஒரு கவர எடுத்திட்டு வந்தா அதில ஒரு வெள்ளை சட்டையும் புளூ ட்ராயரும் இருந்திச்சு, அதுக்குள்ள அவன் எங்கயோ போயிட்டான், ஏன்மா நீங்க கலர் டிரஸ் எடுத்திருக்கீங்க இவனுக்கு மட்டும் ஸ்கூல் யூனுஃபார்ம்னு கேட்டேன், அதுக்கு அந்த பொண்ணு அவனுக்கு அப்பா இல்ல, அதனால அவனுக்கு சித்தி (பையனோட அம்மா ) ஸ்கூல் யூனிஃபார்ம் எடுத்து குடுத்திருக்காங்கனு சொன்னா, அவ சொன்ன உடன் எனக்கு நான் சின்ன வயசு தீபாவளிக்கு வெள்ளை சட்டை காக்கி ட்ரவுசர் போட்டிருந்தது தான் ஞாபகம் வந்துச்சு.


சின்ன வயசுல எனக்கு நினைவு தெருஞ்ச வரைக்கும் பிறந்த நாளுக்கோ அல்லது வேறு எந்த விசேசத்திற்கோ நான் புது துணி எடுத்துப் போட்டதாகவோ,அதை கொண்டாடியதாகவோ ஞாபகம் இல்லை,எனக்கு யாரும் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதாகவும் நினைவும் இல்லை,  இன்று புது டிரஸ் வாங்க வசதி இருந்தும் வாங்க விருப்பம் இல்லை, இந்த வருடம் இந்த நாளில் ( டிசம்பர் 25 ) நான் எப்போதும் போல தனிமையில் தான் இருக்கப்போகிறேன். 



எனது கண்ணீர்க் கதையைப் படித்து நெகிழும் அன்புள்ளம் கொண்ட கருணாமூர்த்தி(னி)கள் தயவு செய்து புதுத்துணி எடுக்க தங்களால் இயன்ற பொருளுதவி செய்து உதவுமாறு மல்லாக்க விழுந்து வேண்டிக் கொள்கிறேன்



உங்கள் பாசமுள்ள செந்தில்

5 comments:

  1. HAppY BirThdaY Dhum Dhada - @SeSenthilkumar

    ReplyDelete
  2. மாம்ஸ் புது துணி என்னயா புது துணி! ஒனக்கு என் தங்கச்சியவே கட்டிவைக்கிறேன்யா! நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லுயா!

    ReplyDelete
  3. மச்சி எல்லோர் வாழ்விலும் ஒவ்வொரு சோகங்கள் நிறைந்திருக்கும் ஆனால் அவை அந்த நேரத்தில் எமக்கு கவலை கொடுத்திருந்தாலும் காலம் சென்ற பின்பு அதனால் ஏற்பட்ட வலி மற்றவர்களுக்கு வரக்கூடாது என நினைக்கிறோமே அதுவே போதும்..கவலைவேண்டாம் நண்பா நாங்கள் இருக்கிறோம் ,பார்த்தியா உன்னோட பெயர் நட்சத்திரத்துக்கு நான் கதிர்காமத்திலேயே அர்ச்சனை பண்ணீ வந்திருக்கிறேன்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete