Saturday, December 24, 2011

ஏசுவும் நானும்! - ஒரு கண்ணீர்க் காவியம்கொஞ்ச நாள் முன்னாடி ( தீபாவளிக்கு 2 நாள் முன்னாடி ) என்னோட ஃபிரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன், அங்க அவனோட சொந்தகாரங்கல்லாம் வந்திருந்தாங்க! அதுல குழந்தைக நாலஞ்சு பேர் இருந்தாங்க; எல்லாரும் என்கிட்ட தங்களோட தீபாவளி ட்ரஸ காமிச்சாங்க, அதுல ஒரு பையன் ( 8 வயசு இருக்கும் ) மட்டும் காமிக்கல, நானும் கேட்கல! எல்லா குழந்தைகளும் விளையாடிட்டு இருந்தாங்க! அந்த பையன் மட்டும் தனியா உட்கார்ந்திருந்தான், ஏன்பா எல்லாரும் சந்தோசமா வெளையாடராங்கல்ல?  நீ ஏன் சும்மா இருக்கேனு கேட்டேன், இல்லைங்க சும்மா தான்னு சொல்லிட்டான், நானும் ஃபிரண்டுகிட்ட சொல்லீட்டு வீட்டுக்கு வந்திட்டேன்.


அடுத்த நாளும் ஃப்ரண்டு வீட்டுக்கு போக வேண்டியதா போச்சு, எல்லாரும் வெடி வெடிச்சிட்டு இருந்தாங்க அந்த பையன் மட்டும் எப்பவும் போல தனியா இருந்தான், அவன் கிட்ட போய் எல்லாரும் தீபாவளி டிரஸ் காட்டிட்டாங்க, நீ மட்டும் தான் காட்டல எடுத்துட்டு வா பார்க்கறேனு சொன்னேன், அவன் பதிலே பேசல, கூட இருந்த ஒரு பொண்ணு நான் எடுத்திட்டு வர்ரேன் அங்கிள்னு சொல்லீட்டு போய் ஒரு கவர எடுத்திட்டு வந்தா அதில ஒரு வெள்ளை சட்டையும் புளூ ட்ராயரும் இருந்திச்சு, அதுக்குள்ள அவன் எங்கயோ போயிட்டான், ஏன்மா நீங்க கலர் டிரஸ் எடுத்திருக்கீங்க இவனுக்கு மட்டும் ஸ்கூல் யூனுஃபார்ம்னு கேட்டேன், அதுக்கு அந்த பொண்ணு அவனுக்கு அப்பா இல்ல, அதனால அவனுக்கு சித்தி (பையனோட அம்மா ) ஸ்கூல் யூனிஃபார்ம் எடுத்து குடுத்திருக்காங்கனு சொன்னா, அவ சொன்ன உடன் எனக்கு நான் சின்ன வயசு தீபாவளிக்கு வெள்ளை சட்டை காக்கி ட்ரவுசர் போட்டிருந்தது தான் ஞாபகம் வந்துச்சு.


சின்ன வயசுல எனக்கு நினைவு தெருஞ்ச வரைக்கும் பிறந்த நாளுக்கோ அல்லது வேறு எந்த விசேசத்திற்கோ நான் புது துணி எடுத்துப் போட்டதாகவோ,அதை கொண்டாடியதாகவோ ஞாபகம் இல்லை,எனக்கு யாரும் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதாகவும் நினைவும் இல்லை,  இன்று புது டிரஸ் வாங்க வசதி இருந்தும் வாங்க விருப்பம் இல்லை, இந்த வருடம் இந்த நாளில் ( டிசம்பர் 25 ) நான் எப்போதும் போல தனிமையில் தான் இருக்கப்போகிறேன். எனது கண்ணீர்க் கதையைப் படித்து நெகிழும் அன்புள்ளம் கொண்ட கருணாமூர்த்தி(னி)கள் தயவு செய்து புதுத்துணி எடுக்க தங்களால் இயன்ற பொருளுதவி செய்து உதவுமாறு மல்லாக்க விழுந்து வேண்டிக் கொள்கிறேன்உங்கள் பாசமுள்ள செந்தில்

Thursday, December 22, 2011

எக்சைல் விமர்சனம்


நானும் எழுத்தாளன் ஆயிட்டதால எக்சைல் நாவலை விமர்சனம் பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயிட்டேன், பயப்படாதீங்க ஒரே வரில சொல்லிடறேன்.
” கயித்துக்கட்டில்ல குப்புற படுத்திட்டு படிக்க அருமையான புத்தகம் “
Friday, December 9, 2011

நானும் ஆரம்பிச்சிட்டேன்


உ ! லாபம் !


கூகுளாத்தா துணை !              டுவிட்டரப்பன் துணை !      ஃபைனலா நானும் ஆரம்பிச்சிட்டேன், ஏற்கனவே 4 வருசத்துக்கு முன்னாடி எம்புருசனும் கச்சேரிக்குப் போனான்ற ரேஞ்சுல ஏதோ (?) எழுதினேன். ஒரு பயலும் கண்டுக்கல. அதனால கடைய மூடவேண்டியதா போச்சு,

  அதுக்கப்புறம் பல முறை முக்கியும் முனகியும் முடியல(மலச்சிக்கல்லாம் இல்ல) எழுதறதுனாலே அலர்ஜி வேற.  எவ்ளோ ட்ரை பண்ணியும் வரல... சரி போ கழுதனு விட்டுட்டேன். 

    ஆனா இப்ப நம்ம டுவிட்டர் தோழர்கள்  தீபக், சிட்டிபாபு மாம்ஸ், கேசவன் மாம்ஸ் , ரேணு  , நவீனு பிளாக்க பார்த்து பிரமிச்சுப்போய் நாமளும் ஜோ(!)தீல ஐக்கியமாயிடலாம்னு கடைய தொறந்து வெச்சுட்டேன்! 
     இதுகள்லாம் எழுதறது சமூகத்துல எப்பிடி தீய விளைவுகள ஏற்படுத்துன்னு காட்ட வேணாம்!?
      என்னத்த எழுதறதுனு இப்ப வரைக்கும் ஒரு மண்ணும் தோண  மாட்டீங்குது சரி எதாவது எழுதலாம்னு வந்து குத்தவெச்சுட்டேன்.

     இங்க இருக்கறத படிச்சா தொங்கிக் கெடக்கற உங்க அறிவு அப்படியே செங்குத்தா தூக்கி நிக்கும்னு நெனைச்சிராதீங்க அப்படியெல்லாம் ஆகாது.

        இனி இதெல்லாம் நீங்க படிச்சுத்தான் ஆகனும், என்ன செய்வது?விதி வலியது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்.

காடு பிலசு